×

பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவை முன்னிட்டு சபரி மலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

திருவனந்தபுரம் :பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைத்தார். மாத பூஜையை முன்னிட்டு வரும் 18-ம் தேதி வரை 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் மாத பூஜையின் தொடர்ச்சியாக 19-ம் தேதி பங்குனி உத்திர ஆறாட்டு விழா தொடங்க உள்ளது. எனவே அன்று காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரு ராஜீவரு விழாவை கொடி ஏற்றி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து வரும் நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீபூத பலி, உத்சவ பலி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்தில் 5 நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி மாசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 12-ம் தேதி நடை திறக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் 5 நாட்கள் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17-ம் தேதி நடை அடைக்கப்பட்து.


Tags : Sabari Malai Iyappan Temple Walk ,Panguni Uttara Arattu Festival , Panguni Uttara, Sabari Hill, Iyappan Temple, Walking Opening
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!