×

வாலாஜாபாத் பகுதிகளில் சமூக விரோத செயல்களை கண்காணிக்க 50 சிசிடிவி கேமரா

வாலாஜாபாத், மார்ச் 15:  வாலாஜாபாத் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களை கண்டுபிடிக்க 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாலாஜாபாத் மற்றும் அதை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள் வாலாஜாபாத் சென்று, அங்கிருந்துதான் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒரகடம், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்பட பல பகுதிகளில் அரசு, தனியார் மற்றும் பல்வேறு பணிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். மேலும், வாலாஜாபாத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில் இரவு, பகலாக பணியாற்றும் ஊழியர்கள் அதிகம் உள்ளனர்.

இந்நிலையில், வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி, செயின், செல்போன் பறிப்பு, பைக் திருட்டு, வீடு புகுந்து கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் பெருகி வருகின்றன. இதனை தடுக்க, எஸ்பி சண்முகபிரியா உத்தரவின்பேரில், வாலாஜாபாத் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் முத்தியால்பேட்டை, ஊத்துக்காடு, புளியம்பாக்கம், செங்கல்பட்டு சாலை, கட்டவாக்கம் கூட்டு சாலை சந்திப்பு உள்பட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் கடந்த 2 நாட்களாக பொருத்தும் பணி நடந்தது. இதன் கட்டுப்பாட்டு அறைகள் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் இயங்கும். இதை கண்காணிக்க ஒரு காவலர் தினமும்ம்  பணியில் இருப்பார். இதனால், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கும் பணிகள் போலீசாருக்கு  எளிமையாகிவிட்டது.

Tags : Valajabad , In the Walajabad areas Anti-social acts 50 CCTV camera to monitor
× RELATED தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பாலர் சபை கூட்டம்