மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் மகளிர் தின விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் உள்ள மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. அமிர்தம் கல்லூரி முதல்வர் ரூத் தலைமை தாங்கினார். கல்லூர் செயலாளர் சார்லஸ், முதல்வர் சௌதா நளினிகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்களின் சரித்திர சாதனை, அயராத முயற்தி, உழைப்பு, பெண்களின் சிறப்புப் பண்புகள் குறித்து கலந்துரையாடினர். மேலும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டி, பாட்டு, கவிதைப் போட்டிகள் பெண்களின் தனித்துவமான சிறப்பியல்புகளை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டன. இறுதியாக போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories:

>