×

திருக்கழுக்குன்றத்தில் பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம், திருக்கழுக்குன்றத்தில்  நடந்தது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சியினரும், கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர்களை அறிவித்தனர். இதில், அதிமுக கூட்டணியில் திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அக்கட்சி வேட்பாளராக திருக்கச்சூர் கே.ஆறுமுகம் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக சார்பில்  பாமக வேட்பாளருக்கான அறிமுக கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்தது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் எம்.தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளரான திருக்கச்சூர் ஆறுமுகத்தை அறிமுகம் செய்து வைத்தனர். பாமக மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் எஸ்வந்த்ராவ், ஆணூனூர் பக்தவச்சலம், வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Phamaga ,Tirukuldu , In the screw cap Bamaga candidate introductory meeting
× RELATED அதிமுக, அமமுக கூட்டணியில் இருந்து...