பிரம்மா குமாரிகள் சார்பில் பனி லிங்க தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பிரம்மா குமாரிகள் சார்பில் பனிலிங்க தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் காஞ்சிபுரம் ஏகேஜி திருமண மண்டபத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசன நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி நேற்று வரை நடந்தது. இதில் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து தரிசனம் செய்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் அமர்நாத் தத்ரூப பனிலிங்க தரிசனத்துடன் ராஜயோக தியான படவிளக்கக் கண்காட்சி, தேவிகளின் தத்ரூப கண்காட்சி வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.

Related Stories:

>