×

பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மெட்ரோ ஸ்ரீதரன் பாலக்காட்டில் போட்டி

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் பாஜ வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டுள்ளது. டெல்லி பாஜ அலுவலகத்தில் கட்சியின் பொது செயலாளர் அருண் சிங் வேட்பாளர்களின் பெயரை அறிவித்தார்.
கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டமன்ற தொகுதிகளில் 115 இடங்களில் பாஜ போட்டியிடுகின்றது. இதில் 112 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் போட்டியிடும் 17 பாஜ வேட்பாளர்களின் பெயர்கள், மேற்கு வங்கத்தில் மூன்று மற்றும் நான்காவது கட்ட தேர்தலில் போட்டியில் 63 பாஜ வேட்பாளர்களின் பெயர்களையும் பாஜ அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அசோக் லஹிரி அலிபுர்தூர் தொகுதியில் வேட்பாளராக பாஜ களம் இறக்கியுள்ளது. டோலிகன்ஜ் தொகுதியில் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ, தரகேஸ்வர் சட்டமன்ற தொகுதியில் ஸ்வபான் தாஸ்குப்தாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நடிகரும், அரசியல்வாதியுமான எம்பி நிஷித் பர்மானிக் தின்ஹாட்டா தொகுதியில் போட்டியிடுகிறார். கேரள மாநிலத்தில் மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியில் போட்டியிடுகிறார். கன்ஜிராப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் கேஜே அல்போன்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் ஹசினாரா காதுன் பாக்பார் ெதாகுதியிலும், சுமன் ஹரிப்பிரியா ஹஜோ சட்டமன்ற தொகுதியிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

* புதுப்பள்ளியில் உம்மன்சாண்டி
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அவரது சொந்த தொகுதியான புதுப்பள்ளியில் தொடர்ந்து 12வது முறையாக போட்டியிடுகிறார்.

Tags : BJP ,Metro Sreedharan ,Palakkad , BJP candidates list release Metro Sreedharan contest in Palakkad
× RELATED வேலையும் போச்சு.. வண்டியும் போச்சு.....