இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: முத்தரசன் அறிவிப்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியலை மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருத்துறைப்பூண்டி, தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, வால்பாறை, சிவகங்கை ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருத்துறைப்பூண்டி தொகுதியில் க.மாரிமுத்து, தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன், பவானிசாகர் தொகுதியில் பி.எல்.சுந்தரம், திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி (எ) எம்.சுப்ரமணியன், வால்பாறை தொகுதியில் எம்.ஆறுமுகம், சிவகங்கை தொகுதியில் எஸ்.குணசேகரன் ஆகிய 6 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: