×

விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வானூரில் வன்னி அரசு போட்டி

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 6ம் தேதி முதல் விருப்பமனு பெறப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்பட்டோர் விருப்பமனுவை வழங்கினர். வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகளில் விசிக மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதையடுத்து, கடந்த 10ம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் விருப்பமனு அளித்தவர்களிடம் இணையவாயிலாக நேர்காணலை நடத்தினார்.

இந்தநிலையில், விசிக சார்பில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை இணையவாயிலாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் திருமாவளவன் பேசியதாவது: திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக 6 இடங்களில் போட்டியிடுகிறது. 4 தனி தொகுதிகளிலும், 2 பொதுத் தொகுதிகளிலும் நாம் போட்டியிடுகிறோம். விண்ணப்பித்த ஒவ்வொருவருக்கும் தகுதி உண்டு. ஆனால், 6 பேருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற ஒரு இக்கட்டான நிலையில் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு இந்த வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறேன்.

அதன்படி, காட்டுமன்னார் கோவில்(தனி தொகுதி) - கட்சி பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், வானூர் - துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, அரக்கோணம்(தனி தொகுதி)- கவுதம சன்னா, செய்யூர் (தனி தொகுதி)- பனையூர் பாபு, திருப்போரூர்- எஸ்.எஸ்.பாலாஜி, நாகப்பட்டினம் - ஆளூர் ஷானவாஸ் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த ஆறு தொகுதிகளிலும் நாம் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களோடு நாம் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். தோழமை கட்சிகளின் நல்லிணக்கத்தோடு நாம் வெற்றியை ஈட்ட வேண்டும். இதற்கு இயக்க முன்னோடிகள் அனைவரும் தங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.

Tags : Vizika ,Vanni ,Vanur , Vizika candidate list released: Vanni government contest in Vanur
× RELATED பாமக, பாஜ வேட்பாளர்கள், அன்புமணி மனைவிக்கு பிரசாரம் செய்யாத ராமதாஸ்