×

ஆறாட்டு திருவிழா சபரிமலை கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. பங்குனி மாத பூஜைகள் மற்றும் ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று (14ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் ஆறாட்டு திருவிழா நடக்கிறது. 19ம் தேதி காலை 7.15 முதல் 8 மணிக்கு இடையே, தந்திரி கண்டரர் ராஜீவரரு தலைமையில் திருவிழா திருக்கொடியேற்றம் நடக்கிறது. 27ம் தேதி இரவு சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. 28ம் தேதி பம்பையில் ஆறாட்டுடன் திருவிழா நிறைவடைகிறது. அன்று இரவு கோயில் நடை சாத்தப்படுகிறது.

Tags : Arattu Festival Sabarimala Temple Walk Opening , Arattu Festival Sabarimala Temple Walk Opening
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு...