×

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்திற்குட்பட்ட ராவல்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வீரர்கள் நேற்று அங்கு விரைந்தனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். மற்ற தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். சம்பவ இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதி யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Tags : Kashmir , Terrorist firing in Kashmir
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...