×

ஊத்துக்கோட்டை பகுதியில் ரூ.24 கோடியில் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆந்திர - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டு தோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி தண்ணீரும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இந்நிலையில், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர், அனந்தேரி, கச்சூர் ஆகிய பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் கடந்த வருடம் முதல் தொடர்ச்சியாக படத்துடன் செய்தி வெளியா னது. இதையடுத்து, ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் 4வது கிலோ மீட்டரில் இருந்து சேதமடைந்த கால்வாயை ஆலப்பாக்கம் 10வது கிலோ மீட்டர் வரை என 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.24 கோடி செலவில் கால்வாயை சீரமைத்து சிமென்ட் சிலாப்புகள் அமைக்கும் பணி கடந்த வாரம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags : Krishna Canal ,Uthukkottai , Reconstruction of Krishna Canal at Uthukkottai at a cost of Rs. 24 crore
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...