பைக் திருடிய 2 டிரைவர் கைது

சென்னை: விரும்பாக்கம் பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 கார் டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். விரும்பாக்கம் தாய்சா ஹவுசிங் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன்(56). இவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக் கடந்த 1ம் தேதி மாயமானது. இதுகுறித்து விரும்பாக்கம் காவல்நிலையத்தில் சந்திரமோகன் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விரும்பாக்கம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கார் டிரைவர் செல்வம்(40), வியாசர்பாடி எம்.கே.பி.நகரை சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார்(40) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து விரும்பாக்கம் பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 2 கார் டிரைவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>