திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி திருத்தணியில் நெசவாளர் பூங்கா பள்ளிப்பட்டில் அரசு மகளிர் கல்லூரி: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு

பள்ளிப்பட்டு: திருத்தணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.சந்திரன் மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி தலைமையில் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று திமுக அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில் நெசவாளர், நீண்ட நாள் கோரிக்கையான நெசவாளர் பூங்கா திருத்தணியில் அமைக்கப்படும் என்றும், பள்ளிப்பட்டில் அரசு கலைக்கல்லூரி அமைக்க தேர்தல் அறிக்கை திமுக வேட்பாளருக்கு  வாக்காளர் அதரவு பெருக செய்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் தேர்தல் வாக்குறுதிக்கு மகிழ்ச்சி தெரிவித்து வருவதால், சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆஸ்.வி.ஜி.புரத்தில் ஒன்றிய இளைஞரணி துனை அமைப்பாளர் பிரவீன் தேஜா ஏற்பாட்டில் வேட்பாளருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. சமத்துவபுரத்தில் பழுதடைந்துள்ள வீடுகள் புதுப்பிக்க வேண்டும் என்றும் ஏழை எளியோருக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பெண்கள் கேட்டுக்கொண்டனர்.

Related Stories:

>