×

காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு தடை எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின் புதிய வாக்குறுதி

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்துக்கு குரல் கொடுப்போம். எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதி 43-ல், விவசாயிகளுக்கு எதிரான சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது. வாக்குறுதி 367-ல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாக்குறுதி 500-ல் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

* இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐப் பொறுத்தவரை, அதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்ததோடு மட்டுமின்றி நானே வீதிகளில் இறங்கி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் திமுக கொடுத்திருக்கிறது. அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்குக் திமுக அழுத்தமான குரல் கொடுக்கும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : CAA ,MK Stalin , Barrier to the wild school port Cancel the eight-lane project Opposition to CAA law: MK Stalin's new promise
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்