கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியாவை முந்தி 2ம் இடத்தில் பிரேசில்..! தினசரி பாதிப்பு 70,000 ஆக உயர்வு: அச்சத்தில் மக்கள்

டெல்லி: கொரோனா பாதிப்பில் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் 2வது இடத்திற்கு சென்றது. அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏழை, பணக்கார நாடுகள் என்ற பேதமில்லாமல் உலக மக்கள் அனைவரும் தொற்று நோயால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இடையில் சிறிதளவு கட்டுக்குள் வந்த கொரோனா பரவல் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளிலும் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியாவை முந்தி பிரேசில் 2ம் இடத்துக்கு வந்துள்ளது. இந்தியா கொரோனா பாதிப்பில் 3ம் இடத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,000 என்ற அளவில் உள்ள நிலையில் பிரேசிலில் இந்த எண்ணிக்கை 70,000 என்ற அளவில் உள்ளது. அங்கு தினசரி உயிரிழப்பும் 2,000ஐ நெருங்கி வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி, பிரேசில் 2வது இடத்திற்கு சென்றது. அதிகம் பாதிக்கப்பட்டோர் கொண்ட நாடுகளில் அமெரிக்கா (3,00,43,662) முதலிடத்தில் உள்ளது. பிரேசில் (1,14,39,250) இரண்டாவது இடத்திலும், இந்தியா (1,13,59,048) மூன்றாவது இடத்திலும், ரஷ்யா (43,80,525) நான்காவது இடத்திலும் உள்ளது.

Related Stories:

>