பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! தாராபுரத்தில் எல்.முருகன், ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு, கோவை தெற்கில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சியினர் இடம்  பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம்,  மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு,  திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் களம் காண்கிறது. இந்நிலையில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளுக்கான முதற்கட்டமாக 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை - தணிகைவேல்

நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி

குளச்சல், - பி.ரமேஷ்

ராமநாதபுரம் - குப்புராம்

மொடக்குறிச்சி -சி.கே.சரஸ்வதி

துறைமுகம் - பி.வினோத்

ஆயிரம் விளக்கு - குஷ்பு

திருக்கோயிலூர் - கலிவரதன்

திட்டக்குடி (தனி)- பெரியசாமி

கோயம்புத்தூர் தெற்கு- வானதி சீனிவாசன்

விருதுநகர், - பாண்டுரங்கன்

அரவக்குறிச்சி - அண்ணாமலை

திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்

திருநெல்வேலி -நயினார் ராகேந்திரன்

காரைக்குடி - எச்.ராஜா

தாராபுரம் (தனி) - எல்.முருகன்

மதுரை வடக்கு -மருத்துவர் சரவணன்

* அறிவிக்கப்படாத தொகுதிகள்

விளவன்கோடு

உதகமண்டலம்

தளி

Related Stories:

More
>