உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சென்னையில் காலமானார். 61 வயதான அவர்; அண்மையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும், பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

* தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் 1959-ம் ஆண்டு மே 7-ம் தேதி பிறந்தவர் எஸ்.பி.ஜனநாதன்.

* தனது அறிமுகப் படமான இயற்கை திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் எஸ்.பி.ஜனநாதன்

* இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, பூலோகம், லாபம் திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்

* இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>