×

காளையார்கோவில் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள்: விஷப்பூச்சிகள் தங்குவதால் மக்கள் பீதி

காளையார்கோவில்: காளையார்கோவில் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக பல வழக்குகளில் பிடிபட்ட நான்கு சக்கரம் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் விஷபூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது என்று பகுதி மக்கள் கூறுகின்றனர். காளையார்கோவில் காளையப்பன் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் பல வழக்குகளில், பிடிபட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதியில் புதர் மண்டிக் கிடப்பதினால் கொடிய விஷப்பூச்சிகள் அதிகளவு திரிகின்றன. காவல் நிலையத்தைச் சுற்றி சர்ச், காவலர்கள் குடியிருப்பு மற்றும் அதிக வீடுகள் உள்ளது பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் வாகனங்களில் இருந்து இரவு நேரங்களில் விசப்பூச்சிகள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளார்கள். மேலும் அப்பகுதியில் புதர்மண்டி கிடப்பதினால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சமுக ஆர்வலர் கூறுகையில், காளையார்கோவில் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் புதர் மண்டி விஷப்பூச்சிகளின் தங்கும் இதமாக உள்ளது. இரவு நேரங்களில் அப்பகுதிகளில் நடந்து செல்ல மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடங்களை
அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். காவல் நிலையத்தைச் சுற்றி சர்ச், காவலர்கள் குடியிருப்பு மற்றும் அதிக வீடுகள் உள்ளது பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் வாகனங்களில் இருந்து இரவு நேரங்களில் விசப்பூச்சிகள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது

Tags : Kaliningrad , In Kaliningrad, at the police station, for many years, people panicked
× RELATED போக்குவரத்து நெருக்கடியை குறைக்க...