அமைச்சர் கடம்பூர் ராஜூ வாகனத்தை சோதனையிட்ட பறக்கும்படை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

கோவில்பட்டி : அமைச்சர் கடம்பூர் ராஜூ வாகனத்தை சோதனையிட்ட பறக்கும்படை அதிகாரி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கோவில்பட்டி அருகே ஊத்துபட்டியில் நேற்று முன்தினம் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் வாகனம் சோதனையிடப்பட்டது. சோதனையின் போது அமைச்சர் அதிகாரியை ஒருமையில் பேசியதாக கூறப்பட்டது, இது குறித்து  பறக்கும்படை அதிகாரி போலீசில் புகார் அளித்திருந்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் பறக்கும்படை அதிகாரி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பறக்கும்படை அதிகாரி மாரிமுத்து கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

Related Stories:

>