நெய்வேலி: நெய்வேலி என்எல்சி தொழிற்சங்க தேர்தலில், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வெற்றி பெற்றுள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள் 7,500 பேர் பணியாற்றி வருகின்றனர். என்எல்சியில் தொழிற்சங்கங்களுக்கான தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி கடந்த பிப்ரவரி 25ம் தேதி என்எல்சி தொழிற்சங்கங்களுக்கான மறைமுக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 7 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என தொழிற்சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்எல்சி மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் பணி தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.