ஆவடி, திருத்தணியில் ஆவணமின்றி எடுத்து சென்ற 13 லட்சம் அதிரடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

ஆவடி: தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ₹50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் நபர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஆவடி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி பிரியா தலைமையில் போலீசார் ஆவடி பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் கோலடி சாலையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அம்பத்தூர் அடுத்த பாடியை சேர்ந்த தனியார் பள்ளி ஊழியர் ராஜ்குமார்(27) காரில் வந்தார். பறக்கும் படை அதிகாரிகள் அவரை வழிமறித்து  சோதனை செய்ததில் 10 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

அதற்கு எவ்வித ஆவணமும் ராஜ்குமாரிடம் இல்லை. இதனையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ஆவடி தொகுதி தேர்தல் அதிகாரி பரமேஸ்வரி மூலமாக ஆவடி தாசில்தார் செல்வத்திடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை ஆவடி கருவூலத்தில் ஒப்படைத்தார். மேலும், உரிய ஆவணத்தை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தினர். திருத்தணி: திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட தமிழக எல்லையில் உள்ள பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வேகமாக சொகுசு கார் ஒன்று தமிழகத்தை நோக்கி வருவதை கண்ட அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர். அதில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் பகுதியில் இருந்து பூரணச்சந்திரன்(52). அவரது மனைவி பரிமளா, அவரது மகள் மற்றும் அவரது நண்பர்கள் பள்ளிப்பட்டு பகுதியில் நகை வாங்க வந்ததாக கூறினர். மேலும், அவர்களது காரை சோதனை செய்தபோது அதில் ₹3 லட்சத்து 9 ஆயிரத்து 500 இருந்தது. அதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அந்த பணத்தை பறிமுதல் செய்து திருத்தணி கருவூலத்தில் ஒப்ப

Related Stories:

>