மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டம் நேற்று மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், சவுந்தரராசன், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கீழ்வேளூர் (தனி) முன்னாள் எம்எல்ஏ நாகை மாலி, திருப்பரங்குன்றம்    எஸ்.கே.பொன்னுத்தாய், கோவில்பட்டி    கே.சீனிவாசன், கந்தர்வக்கோட்டை (தனி) எம்.சின்னதுரை, அரூர் (தனி) ஏ.குமார், திண்டுக்கல் என்.பாண்டி ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மாார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர்களுக்கும், திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில் பொதுமக்கள் பேரதரவு அளித்து தேர்வு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கின்றனர்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Related Stories:

>