ஆண்டிபட்டியில் நினைச்சது நடக்கல: அமமுகவினர் ஏமாற்றம்

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியிலும், தேனி  மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அக்கட்சியினர்  தெரிவித்திருந்தனர். குறிப்பாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்று,  அரசியலில் திருப்புமுனை கண்ட தொகுதி என்ற அடிப்படையில், ஆண்டிபட்டி  தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அமமுக கட்சி நிர்வாகிகள்  எண்ணியிருந்தனர். ஆனால் டி.டி.வி.தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட  போவதாக அறிவித்துள்ளார். ஆண்டிபட்டி பகுதிக்கு கடந்த இடைத்தேர்தலில்  போட்டியிட்ட ஜெயக்குமார் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனால் ஆண்டிபட்டி அமமுக கட்சியினர் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இருந்தாலும் கெத்தை விட்டு கொடுக்காமல் தேர்தல் பணிகளை சந்திப்போம் என்று  அமமுக கட்சியினர் கூறி வருகின்றனர்.

Related Stories:

>