மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம்: மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

சென்னை: சைதாப்பேட்டையில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரணியன் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்று, வேட்பாளர் மா.சுப்பிரமணியனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பது குறித்து, அனைவரும் தங்களது கருத்துரைகளை வழங்கினர்.

 கூட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வேட்பாளருமான மா.சுப்பிரமணியன் உரையாற்றினார். இதில், பகுதி செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், மற்றும் நிர்வாகிகள் வேளச்சேரி பி.மணிமாறன், சைதை குணசேகரன், சைதை மா.அன்பரசன், வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன், சைதை த.சம்பத், கூட்டணி கட்சிகளின்பொறுப்பாளர்கள் காங்கிரஸ் கட்சியின் பெ.செல்வகுமார், வில்லியம்ஸ், கோகுலகிருஷ்ணன், ஈகை கருணா, மதிமுக சார்பில் ம.சுப்பிரமணியன், எஸ்.வி.குமார், சிபிஎம் கட்சியின் வெங்கடேசன், சிபிஐ கட்சியின் ஆர்.சுசீலா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ம.ஜேக்கப், இராவணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பூவை முஸ்தபா, அன்வர் சாதிக், மமக ஜாபர்சாதிக், தமிழக வாழ்வுரிமை கட்சியின் முத்துராஜ் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சைதை சாதிக்,முத்து மணிகண்டன், பகுதி நிர்வாகிகள் மின்னல் கந்தப்பன், ஆர்.டி.மூர்த்தி, கோட்டூர் கோ.சண்முகம், மேகலா ஜெயவேல், இ.முருகேசன், களக்காடி எல்லப்பன், சி.பி.இறைவன், கவிதா கவுதமன், வி.பி.ஜானகிராமன், வட்ட செயலாளர்கள் சைதை கோ.மதிவாணன், எம்.நாகா, சை.மு.சேகர், எஸ்.பி.கோதண்டம், க.மணி, நா.ராதாகிருஷ்ணன், நேருநகர் எஸ்.பாட்சா, மு.ராஜா, தா.மோகன்குமார், எஸ்.ஆர்.செந்தில், ஆர்.ராஜ்குமார், எல்.ஆரோக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில், எண் 374, அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள தலைமை தேர்தல் பணிமனையை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று காலை திறந்து வைக்கிறார்.

Related Stories:

>