தூண்டில் போடும் மாம்பழம் சிக்குமா சேலம் மேற்கு தொகுதி

இலையின்  கூட்டணியில் சி.எம். மாவட்டத்தில் மேற்கு தொகுதி மாம்பழத்திற்கு   ஒதுக்கியிருக்காங்க. அந்த கட்சியின் முதல் பட்டியலிலேயே மாநில துணை   பொதுச்செயலாளர் அருள் பேரு, இடம் ெபற்றது. அந்தளவுக்கு கட்சியில்   டாக்டருக்கு மிகவும் நெருக்கமானவரு அருள். இதில் விசேஷம் என்னவென்றால்   சேலத்தில்  நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர்   தேர்தல் என்று எந்த தேர்தல் நடந்தாலும் பாமக கூட்டணியின் பிரதான வேட்பாளர்   அருள்தான். இதில் எப்ேபாதும் வெற்றிக்கனி அவரது கையில் கிட்டவில்லை. அந்த   வகையில் இந்த முறைையும் டாக்டரால் அருள் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த  தேர்தல்களை போல, பிரசாரத்தில்  இறங்கியுள்ளார். ‘எல்லா  தேர்தல்களிலும்  அவரை  பார்த்தாச்சு. வேட்பாளர் அருளின் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேறும்.  எங்களுக்கு வாய்ப்பு குடுங்க’ என்று வேண்டுகோள்  வைத்து வலம் வருகிறார்களாம்  மாம்பழத் தொண்டர்கள். இப்படி மாம்பழம்  வீசியுள்ள தூண்டிலில் மேற்கு தொகுதி  சிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான்,  பார்க்க வேண்டும்.

Related Stories:

>