×

அமைச்சர் வீரமணியை எதிர்க்கும் அக்கா மகன்: சபாஷ் சரியான போட்டி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சட்டமன்ற தொகுதி, கடந்த 2011ம் ஆண்டு  தேர்தல் ஆணையத்தின் மூலம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, ஜோலார்பேட்டை  தொகுதியாக உருவானது. ஜோலார்பேட்டை தொகுதியில் முதல் சட்டமன்ற  உறுப்பினராக அதிமுகவில் போட்டியிட்ட கே.சி.வீரமணி தேர்வானார். தொடர்ந்து  சுகாதாரத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.  இதையடுத்து 2016ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக  தேர்வானார். தற்போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக  உள்ளார். தொடர்ந்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் 3வது முறையாக  அதிமுக சார்பில் ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி  போட்டியிடுகிறார். இந்நிலையில் அமைச்சர் கே.சி.வீரமணியை எதிர்த்து  ஜோலார்பேட்டை தொகுதியில் அமமுக சார்பில், ஜோலார்பேட்டை பார்த்தசாரதி  தெருவை சேர்ந்த சி.எஸ்.தென்னரசு சாம்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இவர்  அமைச்சர் கே.சி.வீரமணியின் அக்காள் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அமமுக வேட்பாளர் பார்த்தசாரதி, கடந்த 1994ம் ஆண்டு முதல் அதிமுகவில்  உறுப்பினராக இருந்து 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஜோலார்பேட்டை  ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர்.  பின்னர் 2017ம் ஆண்டில் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து  ஜோலார்பேட்டை நகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்  அமமுக சார்பில் ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால்,  முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட உள்ளார். அதிமுக சார்பில்  போட்டியிடும் அமைச்சர் கே.சி.வீரமணியை எதிர்த்து, அவரது அக்காள் மகன்  அமமுக சார்பில் போட்டியிடுவதால் தொகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விரக்தியில் தள்ளப்பட்ட ரத்தங்கள்:
உள்ளூர் அமைச்சர் வீரமானவரின் அதிகபட்ச தலையீட்டால் வேலூர்,  ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கட்சி புதைகுழியில் தள்ளப்பட்டதாக  ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் வேதனை குரல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக  வேட்பாளர் தேர்வில் வீரமானவரின் ஆதிக்கத்தால் ஆம்பூர், குடியாத்தம்,  கே.வி.குப்பம், அணைக்கட்டு, ஆற்காடு, வேலூர் என பல தொகுதிகளில்  வெற்றிவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளும் கூட வீரமானவர்  மீது கடுங்கோபத்தில் உள்ளதாக அங்லாய்ப்பு குரல்கள் ரத்தத்தின் ரத்தங்கள்  மத்தியில் ஒலித்து வருகிறது.

Tags : Minister ,Veeramani ,Sabash , Akka son who opposes Minister Veeramani: Sabash is the perfect match
× RELATED இந்து மத சடங்குகளின்றி நடைபெறும்...