அமர்நாத் யாத்திரை ஜூன் 28ல் தொடக்கம்ஏப்ரல் 1 முதல் முன்பதிவு

ஜம்மு:காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் பனிமலை அமைந்துள்ளது.  கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகையில் உள்ள  பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது  வழக்கம். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத்  கோயில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு நேற்று  விவாதித்தது.  இதில், புனித யாத்திரை வரும் ஜூன் 28ம் தேதி தொடங்குவது  என்றும், ஏப்ரல் 1ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்படும் என்றும் முடிவு  எடுக்கப்பட்டது. இந்த பனிலிங்கத்தை சராசரியாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர்  வரை தரிசிக்கின்றனர்.

Related Stories: