×

ஆர்ச்சர் பந்தில் ரிவர்ஸ் ப்ளிக்ஸ் ஷாட்டில் சிக்சர்! `பன்ட்’க்கு பீட்டர்சன் பாராட்டு

அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்தது. அப்போது 4வது ஓவரில் ஆர்ச்சர் வீசிய பந்தை ரிஷப் பன்ட்  மட்டையை மாற்றி ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வந்த பந்தை விக்கெட்  கீப்பர் தலைக்கு மேல் ரிவர்ஸ் ஷாட் சிக்ஸ் விளாசினார். இதைக்கண்டு அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்தனர். பலர் அதிர்ச்சியில் உறைந்தனர், சிலர் ரசித்துச் சிரித்தனர்.
இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பதிவில், ``ஹோலி ஸ்மோக்ஸ்! பன்ட் ஆடிய அந்த ஷாட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் பார்த்திராதது.

பிராண்ட் நியூ வெள்ளைப்பந்தை ஆர்ச்சரின் 90மைல் வேகப்பந்தை ஸ்வீப்/லிப்ட் செய்து சிக்ஸ் அடித்தது கிரிக்கெட்டில் இதுவரை பார்த்திராத கிரேட்டஸ்ட் ஷாட் என்று’’ பாராட்டியுள்ளார். ஏ.பி.டி.வில்லியர்ஸை 360 டிகிரி வீரர் என்பார்கள், அதுபோல் இந்தியாவின் வருங்கால 360 டிகிரி வீரர் ரிஷப்பன்ட் என்று நாம் அழைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.

Tags : Peterson ,Bunt , Six on a reverse flicks shot at the archer ball! Peterson praises Bunt
× RELATED “ரிஷப் பண்ட் விளையாடுவதை பென் டக்கெட்...