சோதனையின்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை : பறக்கும் படை அலுவலர் போலீசில் புகார்!!

கோவில்பட்டி : அதிமுக அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளருமான கடம்பூர் ராஜூ காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ நேற்று (மார்ச்12) காலை தனது சொந்த ஊரான கடம்பூரில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் சென்றார். கோவில்பட்டி அருகே ஊத்துபட்டி என்ற இடத்தில் கார் சென்றபோது அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் காரை தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து, எஸ்.ஐ.முருகன் மற்றும் போலீசார் கொண்ட பறக்கும் படை குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

 ஏற்கனவே கடந்த வாரம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கழுகுமலை பகுதியில் காரில் சென்றபோதும் இதே பறக்கும் படை குழுவினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் அமைச்சர் கேட்டபோது, தாங்கள் கடமையை செய்வதாக பறக்கும் படையினர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே பறக்கும் படை சோதனையின்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ, உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லையென பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து, நாலாட்டின்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Related Stories:

>