×

அமைச்சர் வீரமணி தொல்லையால் 3 அதிமுக எம்எல்ஏக்கள் சென்றுவிட்டார்கள் : பெண் அமைச்சர் கண்ணீர் பேட்டி

வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராகவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருப்பவர் நீலோபர் கபில். இவருக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பளிக்கவில்லை. இதையடுத்து, வாய்ப்புக்காக சென்ைனயில் முகாமிட்டிருந்த அவர் நேற்று வாணியம்பாடி திரும்பினார். பின்னர் நிருபர்களிடம், நீலோபர் கபில் கூறியதாவது:

சத்தியமாக சொல்கிறேன். எனக்கு வீரமணி எந்த சமாதானமும் செய்ததில்லை. அம்மா மறைந்துவிட்டார் என்று  பொய் பேசக்கூடாது. அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த ஜெயந்தி, பார்த்திபன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வீரமணி தொல்லையால்தான் வெளியேறி சென்றுவிட்டார்கள். எனக்கும் நிறைய தொந்தரவை அவர் தந்துள்ளார். இதுவரைக்கும் என் கட்சிக்காக நான் ஒரு அமைச்சராக இருப்பதால் அம்மாவுடைய மரியாதைக்காகவும், முதல்வர் எடப்பாடியின் மரியாதைக்காகவும் நான் யாரிடமும் புகார் செய்ததே இல்லை.

தேர்தல் அறிவிக்கப்படும் முன்பு ஓரிரு மாதத்திற்கு முன்பாக ஏலகிரியில் கூட்டணி அமைத்து பேசினார்கள். அப்போது மாற்று கட்சியினர் சிலர் இருந்தார்கள் என எனக்கு தகவல் வந்தது. எனக்கு வேறு கட்சிகளுடன் எந்த தொடர்பும் இல்லை. என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு அமைச்சர் வீரமணி முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

‘பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் 24,000 ஓட்டுகள் விழவில்லை’ பேட்டியின்போது, நீலோபர் கபில் மேலும் கூறியதாவது:
மக்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்தியதால்தான் நான் இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிறேன். எம்.பி தேர்தலில் 24 ஆயிரம் வாக்குகள் வாணியம்பாடியில் கிடைக்கவில்லை என்று அமைச்சர் தரப்பில் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் முஸ்லிம் சமுதாயத்தில் கொஞ்சம் ஓரங்கட்டதான் செய்வார்கள். பிஜேபி கூட்டணி இருந்தும்கூட அமைச்சராக இருந்த பிறகு என்னுடைய சமுதாயத்தினர் என்னை என்னென்ன பேசினார்கள் என்பது எனக்குதான் தெரியும் (அப்போது, கண்ணீர் விட்டு அழுதார்).  இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Minister ,Weeramani , Vaniyambadi: Nilopar Kapil is the Member of the Legislative Assembly for Vaniyambadi, Tirupati District and the Minister for Labor Welfare.
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...