பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் முதல் நாளில் சுயேச்சை வேட்புமனு தாக்கல்-17 பேர் விண்ணப்பம் பெற்றனர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் மனு தாக்கல் முதல்நாளில் மனு தாக்கலுக்காக 17 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. குன்னத்தில் சுயேச்சை ஒருவர் மனுதாக்கல் செய்தார்.சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (12ம்தேதி) தொடங்கியது.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல்செய்ய விரும்புபவர்கள், பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான, பெரம்பலூர் மதரஸா சாலையிலுள்ள சப்.கலெக்டர் அலுவலகத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள், பெரம்பலூர் அரியலூர் சாலையிலுள்ள குன்னம் தாலுகா அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை வழங்க, பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா ஏற்பாடுசெய்துள்ளார்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கலுக்கான முதல் நாளான நேற்று (12ம்தேதி) பெரம்பலூர் சப்.கலெக்டர் அலுவலகத்தில் 6 நபர்கள் விண்ணப்பங்களை பெற் றுச்சென்றுள்ளனர். குன்னம் தாலுகா அலுவலகத்தில் 11நபர்கள் விண்ணப்பங்களை பெற்றுச்சென்றுள்ளனர். இதில் பெரம்பலூர் துறையூர் சாலையில், கல்யாண்நகர் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனரான டாக்டர் புகழேந்தி (58) என்பவர் மட்டும் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பா ளராகப் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இன்றும், நாளையும் (சனி ஞாயிறு) விடுமுறை தினங்கள் என்பதால் வேட்பாளர்கள் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளை சந்திப்பதிலும், ஆ தரவு திரட்டுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

15ம் தேதி அதிமுக மனுதாக்கல்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்(தனி) மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இளம்பை தமிழ்ச்செல்வன், ஆர்.டி.இராமச்சந்திரன், ஆகிய இருவரும் வருகிற 15ம் தேதி பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>