திருப்பூரில் உரிய ஆவணம் இன்றி லாரியில் கொண்டு வரப்பட்ட 252 மூட்டை அரிசி பறிமுதல்-பறக்கும் படை நடவடிக்கை

திருப்பூர் : திருப்பூர், அவினாசி ரோடு பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் லாரியில் கொண்டு வரப்பட்ட 252 கிலோ மூட்டை அரிசியை நேற்று தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஏ.பி. சிக்னல் பகுதியில் பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். லாரியை பெருந்தொழுவை சேர்ந்த கொசுரா (36) என்பவர் ஓட்டி வந்தார். குமார் நகருக்கு செல்வதற்காக லாரி வந்துள்ளது.

 

அதனை சோதனை செய்ததில் மூட்டை, மூட்டையாக அரிசி இருந்தது. ஆனால், அதற்குரிய  ஆவணம் இல்லை. இதனால் லாரியில் இருந்த 162 மூட்டை 25 கிலோ சிப்பம், 50 மூட்டை 10 கிலோ சிப்பம் , 40 மூட்டை 5 கிலோ சிப்பம் என மொத்தம் 4 ஆயிரத்து 750 கிலோ அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர்  திருப்பூர்  ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு கொண்டு வந்து அரிசி மூட்டைகளை ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து அரிசியை பெற்றுச்செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Stories:

>