மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பாபநாசம், மணப்பாறையில் ஜவாஹிருல்லா, அப்துல் சமது

சென்னை:  திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் ஜவாஹிருல்லா, அப்துல்சமது போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதன்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து அந்த இரண்டு தொகுதிகளில் யாரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சியில் ஆலோசனை நடத்தி யாரெல்லாம் வேட்பாளராக போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:  திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2  தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பாபநாசம் தொகுதியில் நானும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் போட்டியிட உள்ளோம். மேலும் 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம், என்றார்.

Related Stories:

>