×

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் இல்லை: கொரோனாவால் இறந்த இந்துக்களின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்

* மதங்களை கடந்த மனிதநேயம்* வலைத்தளங்களில் குவியும் பாராட்டுபேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆவணம் சாலை பகுதியை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வராத நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த சேதுபாவாசத்திரம் பாவா என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ரம்ஜான்  பண்டிகை தினமான நேற்று தொழுகையை முடித்து கொண்டு பேராவூரணி வந்து சடலத்தை, இந்துமத வழக்கப்படி, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர். இதை போல் தென்னங்குடி பகுதியில், தஞ்சாவூர் மருத்துவமனையில்  கொரோனாவால் இறந்த 50 வயது மதிக்கதக்க ஒருவர் சடலத்தையும் நேற்று அடக்கம் செய்துள்ளனர்.மேலும் கடந்த 11ம் தேதி பேராவூரணியில் 60வயது மதிக்க தக்க பிரபல மருத்துவர் உடலையும், 12ம் தேதி மாவடுகுறிச்சியில் 55 வயது மதிக்க ஒருவர் சடலத்தையும் அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி அடக்கம்  செய்துள்ளனர், இவர்கள் அனைவருமே இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரின் பாராட்டையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகின்றனர். இதேபோல், குமரி மாவட்டத்தில் கொரோனாவில் இறந்தவர் குறித்து தகவல் கிடைத்தால் அவர்களின் இறுதி காரியங்களை செய்வதில் தமுமுகவினர் குழுவாக சென்று கவச உடை அணிந்து திறம்பட செய்கின்றனர். ஜாதி, மதங்களுக்கு  அப்பாற்பட்டு இவர்கள் செய்யும் இந்த சேவை சமுக நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக விளங்குகிறது. இவர்களின் இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது….

The post ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் இல்லை: கொரோனாவால் இறந்த இந்துக்களின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Muslims ,Corona ,Thanjai District Peravoorani Asanam Road ,
× RELATED இஸ்லாமியர்கள் தந்த நிலத்தில்...