‘‘கோட்சே’’ சர்ச்சை நடிகர் கமல் மனு தள்ளுபடி

மதுரை: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் கடந்த 2019ல் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவரான நடிகர் கமல், கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார், கமல் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் கமல் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.ஹேமலதா, முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘‘‘மனுதாரர் மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது’’’’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, நடிகர் கமலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>