அம்பானி வீட்டருகே கார் நின்ற சம்பவம்: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பா? திகார் சிறையில் டெலிகிராம் செயலி உருவாக்கப்பட்டது

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்தில், திகார் சிறையில் இருந்து டெலிகிராம் செயலி பயன்படுத்தியதை  டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு மும்பையில், உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டருகே, கடந்த 25ம்  ஜெலட்டின் குச்சிகள் நிரப்பிய கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இதனிடையே, அந்த காரின் உரிமையாளர் மர்மமான முறையில் இறந்தார். தற்போது, இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு, ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்ற தகவல், பிப்ரவரி 27ம் தேதி இரவு டெலிகிராம் செயலி மூலம் தெரிய வந்தது. அதற்கு மறுநாள், அதாவது 28ம் தேதி இச்செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் நடத்திய சோதனையில், இந்த டெலிகிராம் குழு டெல்லி திகார் சிறை பகுதியில் கடந்த 26ம் தேதி உருவாக்கப்பட்ட விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, திகார் சிறைக்கு சென்ற டெல்லி போலீசார் தெஹ்சின் அக்தார் என்ற இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி அடைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து உருவாக்கப்பட்டது தெரிய வந்ததாக தெரிவித்தனர். தெஹ்சின் அக்தார், கடந்த 2014ல் மோடி பிரசாரத்தின் போது மேடையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு, ஐதராபாத், புத்த கயா குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: