மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு: மதிமுக வேட்பாளர்கள் 6 பேர் வாழ்த்து பெற்றனர்

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மதுராந்தகம், வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர், மதுரை தெற்கு, பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் ைவகோ ஆகியோர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் வைகோ நேர்காணல் நடத்தினார்.பின்னர் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். அதன்படி மதுராந்தகம் (தனி) தொகுதியில் மல்லை சத்யா, சாத்தூர் தொகுதியில் ரகுராம், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் சதன் திருமலைக்குமார், பல்லடம் தொகுதியில் முத்துரத்தினம், அரியலூர் தொகுதியில் சின்னப்பா, மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதிமுக ெபாதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, மதிமுக வேட்பாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார். முன்னதாக சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related Stories:

>