×

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதி போட்டியில் இன்று மும்பை - ஏடிகே மோதல்

பதோர்தா: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் மும்பை சிட்டி எப்சி - ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தம் 11 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் தலா 20 ஆட்டங்களில் விளையாடியதன் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த மும்பை சிட்டி எப்சி (40), ஏடிகே மோகன் பகான் (40), நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி (33), எப்சி கோவா (31) அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இரண்டு கட்டங்களாக நடந்த அரை இறுதியில் மும்பை சிட்டி எப்சி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் எப்சி கோவா அணியையும், ஏடிகே மோகன் பகான் அணி 3-2 என்ற மொத்த கோல் அடிப்படையில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் மும்பை சிட்டி எப்சி - ஏடிகே மோகன் பகான் அணிகள் இன்று மோதுகின்றன. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி பதோர்தா, நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. லீக் சுற்றில் மோகன் பகான் அணியை 2 முறை வீழ்த்தியுள்ளதால் மும்பை அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. மும்பைக்கு எதிராக ஏடிகே இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை என் பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக கோப்பையை வெல்ல மும்பை அணியும், 4வது முறையாக சாம்பியானாகும் முனைப்புடன் ஏடிகே அணியும் வரிந்துகட்டுவதால் இன்றைய பைனலில் அனல் பறப்பது உறுதி.

இதுவரை சாம்பியன்கள்
ஆண்டு    சாம்பியன்    2வது  இடம்
2014    அத்லெடிகோ டி கொல்கத்தா    கேரளா பிளேஸ்டர்ஸ்
2015    சென்னையின் எப்சி    கோவா எப்சி
2016    அத்லெடிகோ டி கொல்கத்தா    கேரளா பிளேஸ்டர்ஸ்
2017-18    சென்னையின் எப்சி    பெங்களூரு எப்சி
2018-19    பெங்களூரு எப்சி    கோவா எப்சி
2019-20    ஏடிகே    சென்னையின் எப்சி


Tags : Mumbai ,ADK ,ISL football , Mumbai - ADK clash in the final of the ISL football series today
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை