சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மித்தாலி 10,000 ரன்கள்

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ரன் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும், உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 2வது வீராங்கனை என்ற பெருமையும் இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் (38 வயது) வசமாகி உள்ளது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் அவர் 36 ரன் எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார். 1999ல் இந்திய அணியில் இடம் பிடித்த மித்தாலி இதுவரை 10 டெஸ்ட் (663 ரன்), 212 ஒருநாள் (6974 ரன்), 89 டி20ல் (2364 ரன்) விளையாடி உள்ளார். மகளிர் கிரிக்கெட் ரன் குவிப்பில் இங்கிலாந்தின் சார்லோட்டி எட்வர்ட்ஸ் 10,273 ரன் (316 இன்னிங்ஸ்), மித்தாலி ராஜ் 10,001 ரன் (291 இன்னிங்ஸ்), நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் 7849 ரன் (238 இன்னிங்ஸ்), வெஸ்ட் இண்டீசின் ஸ்டெபானி டெய்லர் 7816 ரன் (229 இன்னிங்ஸ்), ஆஸ்திரேலியாவின் மெக் லான்னிங் 6,900 ரன் (191 இன்னிங்ஸ்) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

Related Stories: