மே 1ம் தேதிக்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன் உறுதி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று 50 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி, நாட்டு மக்களிடையே முதல் முறையாக நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: நான் அதிபராக பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் 100 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பது இலக்காக இருந்தது. இப்போது நாம் இலக்கை அடையவில்லை. இலக்கை வென்றுள்ளோம். ஏனென்றால் நாம் 60வது நாளில் 100 மில்லியன் டோஸ் வழங்கும் இலக்கை அடைந்துவிடுவோம். உலகில் எந்த நாடும் இதனை செய்யவில்லை. அனைத்து மாநிலங்கள், பழங்குடியினர்கள், பிராந்தியங்கள் என அனைத்திலும் அனைத்து பெரியவர்கள் மற்றும் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் மே ஒன்றாம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அதிபர் தெரிவித்தார்.

Related Stories:

>