×

173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக போட்டி

சென்னை: சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், காட்பாடியில் துரைமுருகன், திருச்சி மேற்கில் கே.என்.நேரு, திருக்கோவிலூரில் பொன்முடி, ஆத்தூரில் ஐ.பெரியசாமி, மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ெஜகதீசன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் உள்பட தமிழகம் முழுவதும் 173 பேர் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக முழுவீச்சில் களம் இறங்கியது. தொடர்ந்து கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டது.

அதன்படி காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகள், மதிமுக 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6, விடுதலைச் சிறுத்தைகள்கட்சி 6, இந்திய யூனியன்முஸ்லிம் லீக் கட்சி 3, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகியவைக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டன. கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்சிகள் ேபாட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்தும் ஒப்பந்தம் கையெழுத்தானது.கூட்டணி கட்சிகளுக்கு போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த வேட்பாளர் பட்டியலுடன் நேற்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்றார். அங்கு கலைஞரின் படத்துக்கு கீழ் வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கினார். பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கும் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கும் வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கினார்.பின்னர் அவர் காரில் அண்ணா அறிவாலயம் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து பிற்பகல் 12.30 மணியளவில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.

இதில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். தொடர்ந்து 3வது முறையாக அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் பொது செயலாளர் துரைமுருகன் களம் காண்கிறார். திருச்சி மேற்கில்  கே.என்.நேரு, திருக்கோவிலூரில் பொன்முடி, ஆத்தூரில் ஐ.பெரியசாமி,  மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ெஜகதீசன்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவும், மறைந்த பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றி அழகன் வில்லிவாக்கம் தொகுதியிலும், முன்னாள் எம்எல்ஏ ெஜ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதி தி.நகரிலும் போட்டியிடுகின்றனர்.

இதே போல 173 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக 6 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனித நேய மக்கள் கட்சியில் ஒரு இடம், தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை 1, மக்கள் விடுதலை கட்சி 1 ஆகியவை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதையடுத்து 234 தொகுதிகளில் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மத்திய அரசுக்கு அடிபணிந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை அதிமுக அரசு தமிழகத்தில் திணித்து வந்தது. மக்களுக்கு எதிரான இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். அது திமுகவால் மட்டுமே முடியும் என்று மக்கள் நினைத்து வந்தனர். இதனால், அதிமுகவை எதிர்கொள்ளும் வகையில் பலமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்றார் போல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி பல்வேறு கட்டங்களாக விரிவாக ஆய்வுகள் நடத்தி, அதிலிருந்து சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார்.

இந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களையும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் தமிழக அமைச்சர்கள் கடுமையான வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். எனவே, அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று குரல் வலுத்து வந்தது. அதன்படி இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும்  முதல்வர் எடப்பாடியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து, கார்த்திகேய சிவசேனாதிபதி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஜல்லிகட்டு போராட்டத்தை ஒருங்கிணைத்தவர். அது மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஆவர். பல்வேறு போராட்டங்களையும் முன் எடுத்து வந்துள்ளார்.  

கரூர் தொகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக, முன்னாள் ேபாக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிறுத்தப்பட்டுள்ளார். விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக டாக்டர் பழனியப்பன் நிறுத்தப்பட்டுள்ளார். இதே போல் அமைச்சர்களை தோற்கடிக்கும் வகையில் பவுர் புல்லான வேட்பாளர்கள் திமுகவில் களம் இறக்கப்பட்டுள்ளனர். திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர்.

திமுகவுடன் மோதும் பிற கட்சிகளின் தொகுதிகள் எத்தனை?
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டிடுகிறது. இதில், 130 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. 18 தொகுதிகளில் திமுகவுடன் பாமக மோதுகிறது. 14 தொகுதிகளில் பாஜ மோதுகிறது. 4 தொகுதிகளில் தமாகா நேரடியாக மோதுகிறது.

9 டாக்டர்கள் போட்டி
திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 9 பேர் டாக்டர்கள். புதுக்கோட்டை டாக்டர் முத்துராஜா, ஆலங்குளம் டாக்டர் பூங்கோதை,  பொள்ளாச்சி டாக்டர் வரதராஜன், ராசிபுரம் டாக்டர் மதிவேந்தன், வீரபாண்டி டாக்டர் தருண், விழுப்புரம் டாக்டர் லட்சுமணன், மைலம் டாக்டர் மாசிலாமணி, பாப்பிரெட்டிப்பட்டி டாக்டர் பிரபு ராஜசேகர், ஆயிரம்விளக்கு டாக்டர் எழிலன்.

33 ேபர் வழக்கறிஞர்கள்
திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 33 பேர் வழக்கறிஞர்களாக உள்ளனர். அதன் விவரம்:- ஆர்.கே.நகர் தொகுதி ஜே.ஜே.எபினேசர், பெரம்பூர் ஆர்.டி.சேகர், திருவிக நகர் தாயகம் கவி, எழும்பூர் பரந்தாமன், சைதாப்பேட்டை மா.சுப்ரமணியன், மயிலாப்பூர் த.வேலு, மாதவரம் எஸ்.சுதர்சனம், திருத்தணி எஸ்.சந்திரன், பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன், காட்பாடி துரைமுருகன், பாலக்கோடு பி.கே.முருகன், சேலம் வடக்கு ரா.ராஜேந்திரன், பழனி ஐ.பி.செந்தில்குமார், ஆத்தூர் ஐ.பெரியசாமி, கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி, பெரம்பலூர் எம்.பிரபாகரன், குறிஞ்சிப்பாடி எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சீர்காழி மு.பன்னீர்செல்வம், நன்னிலம் எஸ்.ஜோதிராமன், திருவிடைமருதூர் கோ.வி.செழியன், திருவையாறு துரை.சந்திரசேகர், ஒரத்தநாடு எம்.ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, திருமயம் எஸ்.ரகுபதி, திருப்பத்தூர் பெரியகருப்பன், முதுகுளத்தூர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், விளாத்திக்குளம் மார்க்கண்டேயன், ஒட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா, சங்கரன்கோவில் ஈ.ராஜா, அம்பாசமுத்திரம் ரா.ஆவுடையப்பன், மடத்துக்குளம் ெஜயராமகிருஷ்ணன், வேடசந்தூர் காந்திராஜன்.

12 பேர் பெண்கள்
ஆலங்குளம்-பூங்கோதை ஆலடி அருணா, தூத்துக்குடி-கீதா ஜீவன், மதுரை மேற்கு-சின்னம்மாள், மானாமதுரை-தமிழரசி, கிருஷ்ணராயபுரம்-சிவகாம சுந்தரி, தாராபுரம் (தனி)-கயல்விழி செல்வராஜ், மொடக்குறிச்சி-சுப்புலட்சுமி ஜெகதீசன், கெங்கவல்லி-ரேகா பிரியதர்ஷினி,  ஆத்தூர்-ஜீவா ஸ்டாலின், திண்டிவனம் (தனி) பி.சீத்தாபதி சொக்கலிங்கம், குடியாத்தம்-அமலு, செங்கல்பட்டு-வரலட்சுமி மதுசூதனன்.

108 பேர் பட்டதாரிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் 173 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் டாக்டர்கள், பிஇ பட்டதாரிகள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் என 108 பட்டாதாரிகள் உள்ளனர். 13 பேர் பொறியாளர்கள், 9 பேர் டாக்டர்கள், 31 பேர் வழக்கறிஞர்கள், 6 பிஎச்டி பட்டதாரிகள், 20 பேர் முதுநிலை பட்டதாரிகள், 20 பேர் இளநிலை பட்டதாரிகள்.

திமுக வேட்பாளர் பட்டியல்

எண்    தொகுதி    வேட்பாளர் பெயர்
1    பத்மநாபபுரம்    த.மனோ தங்கராஜ்
2    நாகர்கோவில்    சுரேஷ் ராஜன்
3    கன்னியாகுமரி    எஸ்.ஆஸ்டின்
4    ராதாபுரம்                      எம்.அப்பாவு
5    பாளையங்கோட்டை    மு.அப்துல் வகாப்
6    அம்பாசமுத்திரம்    இரா.ஆவுடையப்பன்
7    திருநெல்வேலி    எ.எல்.எஸ்.லட்சுமணன்
8    ஆலங்குளம்    பூங்கோதை ஆலடி அருணா
9    சங்கரன்கோவில் (தனி)    ராஜா
10    ஒட்டப்பிடாரம் (தனி)    எம்.சி.சண்முகய்யா
11    திருசெந்தூர்    அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
12    தூத்துக்குடி    பி.கீதாஜீவன்
13    விளாத்திகுளம்    ஜி.வி.மார்க்கண்டேயன்
14    முதுகுளத்தூர்    ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்
15    ராமநாதபுரம்    கா.காதர்பாட்சா முத்துராமலிங்கம்
16    பரமக்குடி (தனி)    செ.முருகேசன்
17    திருச்சுழி                 தங்கம் ெதன்னரசு
18    அருப்புக்கோட்டை    சாத்தூர் ராமச்சந்திரன்
19    விருதுநகர்    ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்
20    ராஜபாளையம்    தங்கபாண்டியன்
21    கம்பம்    கம்பம் என்.ராமகிருஷ்ணன்
22    ேபாடிநாயக்கனூர்    தங்க தமிழ்ச்செல்வன்
23    ெபரியகுளம் (தனி)    கே.எஸ்.சரவணகுமார்
24    ஆண்டிப்பட்டி    எ.மகராஜன்
25    திருமங்கலம்    மு.மணிமாறன்
26    மதுரை மேற்கு    சி.சின்னம்மாள்
27    மதுரை மத்தி    பழனிவேல் தியாகராஜன்
28    மதுரை வடக்கு    கோ.தளபதி
29    சோழவந்தான் (தனி)  எ.வெங்கடேசன்
30    மதுரை கிழக்கு    பி.மூர்த்தி
31    மானாமதுரை (தனி)    ஆ.தமிழரசி
32    திருப்பத்தூர்    கே.ஆர். பெரிய கருப்பன்
33    ஆலங்குடி                    சிவ.வீ.மெய்யநாதன்
34    திருமயம்                    எஸ்.ரகுபதி
35    புதுக்கோட்டை    முத்துராஜா
36    விராலிமலை    எம்.பழனியப்பன்
37    பேராவூரணி    என்.அசோக்குமார்
38    பட்டுக்கோட்டை    கா.அண்ணாதுரை
39    ஒரத்தநாடு    எம்.ராமச்சந்திரன்
40    தஞ்சாவூர்    டி.கே.ஜி. நீலமேகம்
41    திருவையாறு    துரை சந்திரசேகரன்
42    கும்பகோணம்    க.அன்பழகன்
43    திருவிடைமருதூர்(தனி) கோவி. செழியன்
44    நன்னிலம்                      எஸ்.ஜோதிராமன்
45    திருவாரூர்    பூண்டி கே. கலைவாணன்
46    மன்னார்குடி    டி.ஆர்.பி.ராஜா
47    வேதாரண்யம்    எஸ்.கே.வேதரத்தினம்
48    பூம்புகார்                      நிவேதா எம்.முருகன்
49    சீர்காழி(தனி)    மு.பன்னீர்செல்வம்
50    புவனகிரி                      துரை கி.சரவணன்
51    குறிஞ்சிப்பாடி    எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
52    கடலூர்                      கோ.அய்யப்பன்
53    நெய்வேலி    சபா.ராஜேந்திரன்
54    திட்டக்குடி(தனி)    சி.வி.கணேசன்
55    ஜெயங்கொண்டம்    கே.எஸ்.கே.கண்ணன்
56    குன்னம்                      எஸ்.எஸ். சிவ சங்கர்
57    பெரம்பலூர் (தனி)    எம்.பிரபாகரன்
58    துறையூர் (தனி)    செ.ஸ்டாலின் குமார்
59    முசிறி                      ந.தியாகராஜன்
60    மணச்சநல்லூர்    சீ.கதிரவன்
61    லால்குடி                     சவுந்திரபாண்டியன்
62    திருவெறும்பூர்    அன்பில் மகேஷ் பொய்யாமொழி
63    திருச்சி கிழக்கு    இனிகோ இருதயராஜ்
64    திருச்சி மேற்கு    கே.என். நேரு
65    ஸ்ரீரங்கம்                      எம்.பழனியாண்டி
66    குளித்தலை    இரா.மாணிக்கம்
67    கிருஷ்ணராயபுரம் (தனி)    சிவகாமசுந்தரி
68    கரூர்                     வி.செந்தில் பாலாஜி
69    அரவக்குறிச்சி    மொஞ்சனூர் ஆர்.இளங்கோ
70    வேடசந்தூர்    எஸ்.காந்திராஜன்
71    நத்தம்                    எம்.எ.ஆண்டி அம்பலம்
72    ஆத்தூர்                   இ.பெரியசாமி
73    ஒட்டன்சத்திரம்    அர.சக்கரபாணி
74    பழனி                    ஐ.பி.செந்தில் குமார்
75    மடத்துக்குளம்    இரா.ெஜயராமகிருஷ்ணன்
76    பொள்ளாச்சி    கே.வரதராஜன்
77    கிணத்துக்கடவு    குறிச்சி பிரபாகரன்
78    சிங்காநல்லூர்    நா.கார்த்திக்
79    தொண்டாமுத்தூர்    கார்த்திகேய சிவசேனாபதி
80    கோவை வடக்கு    சண்முகசுந்தரம்
81    கவுண்டம்பாளையம் பையா (எ) ஆர்.கிருஷ்ணன்
82    திருப்பூர் தெற்கு    க.செல்வராஜ்
83    மேட்டுப்பாளையம்    டி.ஆர்.சண்முகசுந்தரம்
84    கூடலூர்(தனி)    எஸ்.காசிலிங்கம்
85    குன்னூர்                     கா.ராமச்சந்திரன்
86    கோபிசெட்டிப்பாளையம்    ஜி.வி.மணிமாறன்
87    அந்தியூர்    எ.ஜி.வெங்கடாச்சலம்
88    பவானி    ேக.பி.துரைராஜ்
89    காங்கேயம்    மு.பெ.சாமிநாதன்
90    தாராபுரம் (தனி)    கயல்விழி செல்வராஜ்
91    மொடக்குறிச்சி    சுப்புலட்சுமி ஜெகதீசன்
92    ஈரோடு மேற்கு    சு.முத்துசாமி
93    குமாரபாளையம்    எம்.வெங்கடாசலம்
94    பரமத்திவேலூர்    கே.எஸ்.மூர்த்தி
95    நாமக்கல்    பெ.ராமலிங்கம்
96    சேந்தமங்கலம் (பழங்குடி)    கே.பொன்னுசாமி
97    ராசிபுரம் (தனி)    மா.மதிவேந்தன்
98    வீரபாண்டி    ஆ.கா.தருண்
99    ேசலம் ெதற்கு    எ.எஸ்.சரவணன்
100    சேலம் வடக்கு    இரா.ராஜேந்திரன்
101    சேலம் மேற்கு    சேலத்தாம்பட்டி ராஜேந்திரன்
102    சங்ககிரி                      கே.எம்.ராஜேஷ்
103    எடப்பாடி                      த.சம்பத் குமார்
104    மேட்டூர்    எஸ்.சீனிவாச பெருமாள்
105    ஏற்காடு(பழங்குடி)    சி.தமிழ்செல்வன்
106    ஆத்தூர்(தனி)    ஜீவா.ஸ்டாலின்
107    கெங்கவல்லி (தனி)    ஜெ.ரேகா பிரியதர்சினி
108    சங்கராபுரம்    தா.உதயசூரியன்
109    ரிஷிவந்தியம்    வசந்தம் கார்த்திக்கேயன்
110    உளுந்தூர்பேட்டை    எ.ஜெ.மணிகண்டன்
111    திருக்கோவிலூர்    க.பொன்முடி
112    விக்கிரவாண்டி    நா.புகழேந்தி
113    விழுப்புரம்    ஆர்.லட்சுமணன்
114    திண்டிவனம் (தனி)    பி.சீத்தாபதி சொக்கலிங்கம்
115    மைலம்                     மாசிலாமணி
116    செஞ்சி                    கே.எஸ்.மஸ்தான்
117    வந்தவாசி (தனி)    எஸ்.அம்பேத்குமார்
118    செய்யாறு                    ஒ.ஜோதி
119    ஆரணி                   எஸ்.எஸ்.அன்பழகன்
120    போளூர்                  கே.வி.சேகரன்
121    கலசப்பாக்கம்    பெ.சு.தி.சரவணன்
122    கீழ்பென்னாத்தூர்    கு.பிச்சாண்டி
123    திருவண்ணாமலை    ஏ.வ.வேலு
124    செங்கம்(தனி)    மு.பெ.கிரி
125    பாப்பிரெட்டிபட்டி    எம்.பிரபு ராஜசேகர்
126    தருமபுரி                    தடங்கம் பெ.சுப்பிரமணி
127    பென்னாகரம்    பி.என்.பி.இன்பசேகரன்
128    பாலக்கோடு    பி.கே.முருகன்
129    ஓசூர்                   ஒய்.பிரகாஷ்
130    வேப்பனஹள்ளி    பி.முருகன்
131    கிருஷ்ணகிரி    டி.செங்குட்டுவன்
132    பர்கூர்                    தே.மதியழகன்
133    திருப்பத்தூர்    எ.நல்லதம்பி
134    ஜோலார்பேட்டை    கே.தேவராஜ்
135    ஆம்பூர்                    ஆர்.செ.வில்வநாதன்
136    குடியாத்தம் (தனி)    வி.அமலு
137    கீழ் வைத்தினான்குப்பம் (தனி)  கே.சீத்தாராமன்
138    அணைக்கட்டு    ஏ.பி.நந்தகுமார்
139    வேலூர்                    ப.கார்த்திகேயன்
140    ஆற்காடு                 ஜே.எல்.ஈஸ்வரப்பன்
141    ராணிப்பேட்டை    ஆர்.காந்தி
142    காட்பாடி              துரைமுருகன்
143    காஞ்சிபுரம்    சி.வி.எம்.பி.எழிலரசன்
144    உத்திரமேரூர்    க.சுந்தர்
145    செங்கல்பட்டு    வரலட்சுமி மதுசூதனன்
146    தாம்பரம்                எஸ்.ஆர்.ராஜா
147    பல்லாவரம்    இ.கருணாநிதி
148    ஆலந்தூர்    தா.மோ.அன்பரசன்
149    சோழிங்கநல்லூர்    எஸ்.அரவிந்த் ரமேஷ்
150    ஆவடி                     சா.மு.நாசர்
151    பூவிருந்தமல்லி(தனி)    ஆ.கிருஷ்ணசாமி
152    திருவள்ளூர்    வி.ஜி.ராஜேந்திரன்
153    திருத்தணி    எஸ்.சந்திரன்
154    கும்மிடிப்பூண்டி    டி.ெஜ.கோவிந்தராஜன்
155    திருவொற்றியூர்    கே.பி.சங்கர்
156    மாதவரம்                   எஸ்.சுதர்சனம்
157    அம்பத்தூர்    ஜோசப் சாமுவேல்
158    மதுரவாயல்    காரப்பாக்கம் க.கணபதி
159    மயிலாப்பூர்    த.வேலு
160    தி.நகர்               ஜெ.கருணாநிதி
161    சைதாப்பேட்டை    மா.சுப்பிரமணியன்
162    விருகம்பாக்கம்    ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா
163    அண்ணாநகர்    எம்.கே.மோகன்
164    ஆயிரம் விளக்கு    டாக்டர் நா.எழிலன்
165    திருவல்லிக்கேணி-சேப்பாக்கம்    உதயநிதி ஸ்டாலின்
166    துறைமுகம்    பி.கே.சேகர்பாபு
167    ராயபுரம்    ஐட்ரீம் இரா.மூர்த்தி
168    எழும்பூர் (தனி)    இ.பரந்தாமன்
169    திரு.வி.க.நகர்(தனி)    தாயகம் கவி
170    வில்லிவாக்கம்    அ.வெற்றி அழகன்
171    பெரம்பூர்                    ஆர்.டி.சேகர்
172    ஆர்.கே.நகர்    ஜே.ஜே.எபினேசர்
173    கொளத்தூர்    மு.க.ஸ்டாலின்

தொண்டர்கள் குவிந்தனர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். வேட்பாளர் யார் என்பதை அறிவதற்காக காலை 9 மணி முதல் அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தொண்டர்கள் குவிய தொடங்கினர். நேரம் ஆக, ஆக தொண்டர்களின் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் தொண்டர்களாக காட்சியளித்தனர். காலை 11.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க, மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கம் எழுப்பினர்.

Tags : Kolatur ,Stalin , Competing in 173 constituencies DMK candidate list released: MK Stalin contests for the 3rd time in Kolathur
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...