×

திருப்போரூர் தொகுதியில் பாமக - விசிக நேரடி போட்டி

திருப்போரூர்: வரும் சட்டமன்ற தேர்தலில், திருப்போரூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக நேரடியாக மோதுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. நேற்று திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னதாக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் கையெழுத்தாகின.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. அதில் நாகப்பட்டினம் மற்றும் திருப்போரூர் ஆகிய இரு பொது தொகுதிகளிலும் வி.சி.க. போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் திருப்போரூர் தொகுதியில் பாமக சார்பில் திருக்கச்சூர் ஆறுமுகம் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு திருப்போரூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள இரு கட்சிகள் நேரடியாக மோதும் ஒரே தொகுதியாக திருப்போரூர் உருவாகி உள்ளது. விசிக சார்பில் வேட்பாளராக எஸ்.எஸ்.பாலாஜி போட்டியிட உள்ளார்.

Tags : Pamaka - Visika ,Thiruporur constituency , Pamaka - Visika live match in Thiruporur constituency
× RELATED திருப்போரூர் தொகுதியில் 12 பேர் மனுக்கள் ஏற்பு: 7 மனுக்கள் தள்ளுபடி