×

தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவை தெற்கில் பாஜக, காங்கிரஸ், கமல் போட்டி: இந்தியளவில் டுவிட்டரில் #CoimbatoreSouth என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்.!!!

சென்னை: இந்தியளவில் டுவிட்டரில் #CoimbatoreSouth என்ற ஹஷ்டெக் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக மற்றும் அமமுக சார்பில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணிகள் ஓரளவு முடிந்துள்ளது. அதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமக, ஐஜேகே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

இதற்கிடையே, முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்டுக்கு முன் வெளியிட்ட நிலையில், இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும், நாடாளுமன்ற தேர்தலில் 37 வேட்பாளர்களை போட்டியிட வைத்தார். இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக கமல்ஹாசன் போட்டியிடுகிறார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம் என்று குறிப்பிட்டுள்ளார். கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம், நேரடியாக பாஜக மற்றும் காங்கிரஸ் என்ற இரு தேசிய கட்சிகளுடன் மோதுகிறார்.

இந்நிலையில், டுவிட்டரில் இந்தியளவில் #கோவை_தெற்கில்_நம்மவர், #CoimbatoreSouth, #Kamalhassan ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி வருகிறது.



Tags : TN Assembly Elections ,Gowai ,South ,BJaka ,Congress ,Kamal ,Contest ,India , தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவை தெற்கில் பாஜக, காங்கிரஸ், கமல் போட்டி: இந்தியளவில் டுவிட்டரில் #CoimbatoreSouth என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்.!!!
× RELATED விபத்தில் மாணவர்கள் 6 பேர் படுகாயம்