×

சட்டமன்ற பொதுத்தேர்தலில் 24 அமைச்சர்களுக்கு எதிராக நேரடியாக மோதும் திமுக...!

சென்னை: சட்டமன்ற பொதுத்தேர்தலில் 24 அமைச்சர்களுக்கு எதிராக நேரடியாக திமுக வேட்பாளர்கள் மோதுகின்றனர். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அமைச்சர்கள் உடன் திமுக எம்எல்ஏக்கள் நேரடியாக மோதுகின்றனர். அதன்படி இடைப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக வேட்பாளர் சம்பத்குமார் போட்டியிடுகின்றார்.

அதே போன்று போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக தங்க தமிழ்செல்வன், தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி எதிராக கார்த்திகேய சிவசேனாதிபதி, கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக மணிமாறன், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக ஐட்ரீம் ரா.மூர்த்தி, ஜோலார்ப்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி எதிராக தேவராஜ், மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பென்ஜமினுக்கு எதிராக காரப்பாக்கம் கணபதி, விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக பழனியப்பன், கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக செந்தில்பாலாஜி பாலக்கோடு தொகுதியில் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக பி.கே.முருகன், ஆவடி தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக நாசர்.

விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சிவி.சண்முகத்துக்கு எதிராக லட்சுமணன், ஆரணி தொகுதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு எதிராக எஸ்.எஸ்.அன்பழகன், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா மதிவேந்தன், திருச்சி கிழக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராக இனிகோ இருதயராஜ், குமாரபாளயைம் தொகுதியில் அமைச்சர் பி.தங்கமணிக்கு எதிராக எம்.வெங்கடாச்சலம், பவானி தொகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பண்ணனுக்கு எதிராக கேபி.துரைராஜ், திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக மு.மணிமாறன்.

மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக சின்னம்மாள், ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக தங்கபாண்டியன், சங்கரன் கோயில் தொகுதியில் அமைச்சர் விஎம்.ராஜலட்சுமிக்கு எதிராக ஈ.ராஜா, வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் எதிராக வேதரத்தினம், நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜ் எதிராக ஜோதிராமன், கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்சி.சம்பத்துக்கு எதிராக அய்யப்பன் ஆகிய 24 திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Tags : Assembly ,General Assembly , DMK to clash directly against 24 ministers in Assembly general election ...!
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு