×

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கும் ராணுவ வீரர்கள்! சி.சி.டி.வி. காட்சி வெளியீடு..!!

நய்பிய்டா: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் பெண் ஒருவரை ராணுவ வீரர்கள் தாக்கிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது. ஒரு ராணுவ வீரர் கன்னத்தில் அரைவதும் மற்றொருவர் காலால் எட்டி உதைப்பதும் அதில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பலரது எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. கடந்த 2021 பிப்ரவரி 1ம் தேதி மியான்மரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ந்த ராணுவம், ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை காவலில் வைத்தது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் மியாவின் நகரத்தில் போராட்டம் நடத்திய 7 பேர் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் தலையில் சுடப்பட்டு உயிரிழந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர் ஒருவரை ராணுவ வீரர்கள் தாக்கும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது. ராணுவ வீரர் ஒருவர் கண்மூடித்தனமாக அப்பெண்ணை தாக்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐ கடந்துவிட்டது. இதனிடையே ஆங் சான் சூச்சி  6 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 11 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக பெற்றதாக மியான்மர் ராணுவர் குற்றம்சாட்டியுள்ளது. மியான்மரில் மக்கள் கொல்லப்படுவதை கண்டித்து அமெரிக்கா போன்ற சில நாடுகள் பொருளாதார கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. 


Tags : Myanmar , Myanmar, military rule, women, soldiers, attack, CCTV.
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்