×

அலாஸ்காவில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த 18 அங்குல பனி!: வீடுகள், சாலைகள் பனிபடர்ந்து காட்சி..!!

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஒரே இரவு 18 அங்குலம் அளவுக்கு பனி கொட்டி தீர்த்தத்தால் சாலைகள், வாகனங்கள் அனைத்தும் உறைபனி வியாபித்துள்ளது. அலாஸ்காவில் 2ம் கட்ட பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் உறைபனி கொட்டி வருகிறது. ஆங்கரேஜ் என்ற நகரத்தில் ஒரே இரவில் 18 அங்குலம் அதாவது சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு உறைபனி கொட்டியிருக்கிறது. இதனால் சாலைகள், வீடுகள், வாகனங்கள் அனைத்தும் பணிக்குவியலால் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, இந்த அளவுக்கு பனி பெய்திருப்பது சற்று அதிர்ச்சியை அளிக்கிறது. நேற்று இரவு மிக குறைந்த அளவே பனிப்பொழிவு இருந்தது. அது ஒரு அடிக்கும் அதிகமாக உயரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார். மற்றொருவர் கூறும்போது, நான் இருக்கும் கிழக்கு நகரத்தில் 16 அங்குலம் அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும். இன்று காலையில் எழுந்து பார்க்கும்போது மலை நகரமான ஆங்கரேஜில் அதிக அளவில் பனி பெய்துள்ளதாக தகவல் கிடைத்தது.

அங்கு மட்டும் 18 அங்குலம் பனிப்பொழிவு பதிவாகி இருக்கிறது. சில இடங்களில் மட்டும் 16 அங்குலம் அளவுக்கு பனி பெய்துள்ளது என்று தெரிவித்தார். சாலைகளை பனி மூடியிருப்பதால் அலாஸ்காவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு பனிபொழிவின் விழுக்காடு மேலும் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Tags : Alaska , Alaska, 18 inches of snow, roads, vehicles, snow
× RELATED நடுவானில் கதவு கழன்று விழுந்த...