×

உடுமலை, மடத்துக்குளம் சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி கோலாகலம்

உடுமலை : உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மாலை 4 மணிக்கு திருச்சப்பரம் பூலாங்கிணறில் இருந்து  கோயிலுக்கு வந்தடைந்தது. இரவு 8 மணிக்கு முதல் கால பூஜை, அபிசேகம், தீபாராதனை நட்நதது. 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 2 மணிக்கு மூன்றாம் கால பூஜைகள் நடந்தன.

இன்று (12-ம்தேதி) அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும், 5 மணிக்கு சிறப்பு அலங்காரம், சோடச உபசார தீபாராதனையும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல், மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழா நடந்தது. இக்கோயில் அமராவதி ஆற்றங்கரையில் சோழ மன்னர்களால் 950 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.

நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நான்கு காலமாக பிரித்து ஹோமம், அபிசேக அலங்காரம், சிறப்பு பூஜை, பாராயணம் நடக்கிறது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் பல்வேறு கோயில்களில் மகாசிவராத்திரி நடைபெற்றது.

Tags : Udumalai ,Madathukulam ,Mahasivarathri ,Shiva temples , Udumalai: The Maha Shivaratri festival was celebrated at the Thirumurthymalai Amanalingeswarar Temple near Udumalai yesterday. 4 p.m.
× RELATED வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம்