×

பேராவூரணி ரயில் நிலையத்தில் புதர் மண்டிக்கிடக்கும் அவலம்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

*இது உங்க ஏரியா

பேராவூரணி : பேராவூரணி ரயில் நிலையம் பராமரிப்பு இன்றி புதர் மண்டிக்கிடக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நூறு ஆண்டுகள் பழமையான பேராவூரணி ரயில் நிலையம் கடந்த 2012ம் ஆண்டு காரைக்குடி - திருவாரூர் இடையேயான அகல ரயில் பாதை பணிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றது.

மூன்று ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என கூறப்பட்டு ஒன்பது ஆண்டுகளை கடந்தும் பணிகள் முடிந்தபாடில்லை. பேராவூரணி ரயில் நிலையத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டி நடைமேடைகள் அமைக்கப்பட்டு, திறப்பு விழா காண்பதற்குள் பராமரிப்பில்லாததால் பாழாகி வருகிறது.
ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட நடைபாதைகள் தரமாக கட்டப்படாததால் விரிசல் ஏற்பட்டு உள்ளது. 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலால் சேதமடைந்த ரயில் நிலையத்தில் உள்ள மின் விசிறிகள் பழுதைடைந்த நிலையில் உள்ளது.

புதிதாக பொருத்தப்பட்ட மின்விளக்குளை காணவில்லை. இரவு நேரங்களில் இருட்டாக உள்ளதால் மது பிரியர்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
குடித்து விட்டு காலி பாட்டில்களை ரயில்வே நிலையத்தை சுற்றியுள்ள புதர்மண்டிய பகுதிகளில் வீசிவிட்டு செல்கின்றனர். போதை அதிகமான நிலையில் சண்டையிட்டு, சப்தம் போட்டுவதால் எதிரே உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் அச்சமடைகின்றனர்.

எனவே ரயில் நிலையத்தை சுற்றி மண்டியுள்ள புதர்களை அழித்து, மின்விளக்குகளை சரிசெய்து, இரவு நேரங்களில் மின்விளக்குகளை எரியவிடுவதுடன், இரவு காவலர்களை நியமனம் செய்து, விரிசலான நடைமேடையை சரிசெய்து ரயில் நிலையத்தை பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bush ,Peravurani ,station , Peravurani: Peravurani railway station is in a state of disrepair. So social activists as to take appropriate action
× RELATED பேராவூரணி வாக்குச்சாவடி மையங்களில்