×

பாஜகவில் இணைந்த 2 நாட்களில் பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்திக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு : மத்திய அரசு

டெல்லி : பாஜகவில் இணைந்த 2 நாட்களில் பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்திக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.1980 களில் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. தமிழிலும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் எம்பியாக இருந்தவர். பின்னர் 2016ம் ஆண்டு சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் இவரது பெயர் அடிபட்டதால் எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்து கொண்ட அந்தப் பொதுக்கூட்டத்தில், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார்.இவர் பாஜகவில் இணைந்த இரு நாட்களில் மிதுன் சக்கரவர்த்திக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையானது (சிஐஎஸ்எஃப்), சிறப்பு பாதுகாப்பு குழு மூலம் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் 11 கமாண்டோக்கள் இருப்பர்.மிதுன் சக்ரவர்த்திக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதன் அடிப்படையில் அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் உட்பட 104 நபர்களுக்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Bollywood ,Mithun Chakraborty ,BJP ,Central Government , மிதுன் சக்ரவர்த்தி
× RELATED மண்டி தொகுதி பாஜக வேட்பாளரான நடிகை...