இந்தியாவின் எதிர்ப்பை மீறி அருணாச்சல் அருகே பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டும் திட்டத்திற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல்!: மத்திய அரசு அதிர்ச்சி..!!

பெய்ஜிங்: இந்தியாவின் எதிர்ப்பை மீறி அருணாசலப்பிரதேசம் அருகே பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டும் திட்டத்திற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா - வங்கதேசம் வழியாக பயணிக்கும் பிரம்மபுத்திரா நதி, ஆசியாவில் வற்றாத ஜீவ நதிகளில் ஒன்றாகும். இந்த நதியின் குறுக்கே அருணாசலப்பிரதேசம் அருகே திபெத்தின் மொடோ கவுண்டியில் அணை கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. அத்துடன் நீர்மின் நிலையம் ஒன்றை கட்டவும் முடிவு செய்துள்ளது. பிரம்மபுத்திரா நதி நீரை பங்கீட்டு கொள்ளும் இந்தியா மற்றும் வங்கதேசம் இந்த திட்டத்தை கடந்த ஓராண்டாக எதிர்த்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 ஆண்டு திட்டத்தை வெளியிட்ட சீனா, அதில் பிரம்மபுத்திராவில் அணை கட்டும் திட்டத்தையும் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு சீன நாடாளுமன்றம் தற்போது ஒப்புதலும் அளித்துள்ளது. அணையின் கட்டுமான பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா, வங்கதேசம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நாடுகளுக்கு வரும் நதி நீரை அணை கட்டி தடுப்பதன் மூலமாக அது சர்வதேச பிரச்னையாக மாறக்கூடும் எனவும் இந்தியா எச்சரித்துள்ளது. தொடர்ந்து, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டும் சீனாவின் இத்தகைய செயல் மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>